அதிரையில் மீண்டும் கோர விபத்து!(படங்கள் இணைப்பு)

அதிரை கரையூர் தெரு பெட்ரோல் பங்க் அருகில் ஏற்பட்ட சாலை விபத்தில் மதுக்கூரை சேர்ந்த வியாபாரி ஜெய்சங்கர் பலத்த காயமடைந்தார்.

இன்று காலை 11.00 மணியளவில் அதிரை கரையூர் தெரு பெட்ரோல் பங்க் அருகில் ஜெய்சங்கர்  தனது இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டு இருந்தார் அப்போது புதுச்சேரியில் இருந்து பேராவூரணி நோக்கி வந்த கார் திடீரென ஜெய்சங்கர் மீது மோதியது.இதில் ஜெய்சங்கர் அருகில் உள்ள பள்ளத்தில் விழுந்தார்.இதில் அவருக்கு கை மற்றும் கால் பகுதியில் பலத்த காயம் ஏற்ப்பட்டது.    

உடனே அருகில் இருந்த மக்கள் அவரை மீட்டு  தமுமுக ஆம்புலன்ஸ் மூலம் ஜெய்சங்கரை அதிரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது மேல்சிகிச்சைக்காக பட்டுக்கோட்டைக்கு த.மு.மு.க ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

Advertisement

Close