Adirai pirai
exclusive உள்ளூர் செய்திகள்

அதிரை மக்கள் 2012 முதல் 2016 வரை ஏமாற்றப்பட்ட லிஸ்ட் இதோ…

அதிரையில் மக்களின் தொடர் கோரிக்கைகளுக்கு பிறகு பல லட்சங்கள் செலவில் செய்யப்படும் சாலை பணி, கால்வாய் பணி போன்ற அரசு நலத்திட்டங்களில் பல்வேறு ஊழல் நடைபெறுவதாக மக்கள் சந்தேகிக்கின்றனர். சாலை அமைப்பு திட்டங்களாகட்டும், வடிகால் திட்டங்களாகட்டும் அந்த பணிகள் முடிவடைந்த சில நாட்களில் அது பழுதடைந்துவிடுகிறது.

இது அதிகாரிகளின் மீதான குற்றமா… அல்லது அதனை செய்யும் ஒப்பந்ததாரர்களின் மோசடியா… என்று புரியவில்லை… மொத்தத்தில் மக்கள் முட்டாளாக்கப்பட்டு வருகின்றனர் என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை… இந்த நிலையில் அதிரையை சேர்ந்த சமூக ஆர்வலர் காலித், அதிரையில் கடந்த 2012 முதல் 2016 வரை நடைபெற்ற அரசு பணிகள் தொடர்பான விபரங்களை கேட்டு தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ் விண்ணப்பித்து இருந்தார். அதன் மூலம் கிடைத்த தகவல் இப்பதிவில் இணைக்கப்பட்டுள்ளது. அதில் எந்தெந்த திட்டங்களின் பெயரில் என்னென்ன பணிகள் நடைபெற்றன. அதற்கு செலவான தொகை பற்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து பணிகளும் முழுமையாக நிறைவு செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதனை படிக்கும் வாசகர்கள் கீழ்காணும் திட்டங்கள் தத்தமது பகுதிகளில் நிறைவேற்றப்பட்டுள்ளதா? என்பதை அறிந்து நமக்கு தகவல் தெரிவித்தால் நேரில் வந்து உண்மையை ஆய்வு செய்து, பேரூராட்சியின் மோசடிகளை அம்பலப்படுத்த உதவியாக இருக்கும். இந்த விசயத்தில் வாசகர்களாகிய உங்களது முழு ஒத்துழைப்பை நாங்கள் எதிர்பார்க்கிறோம்.