Adiraipirai.in
Uncategorised Uncategorized

அமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கி இருப்பவர்களுக்கு பொது மன்னிப்பு காலம் அறிவிப்பு

அமீரகத்தில் வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் அக்டோபர் 31 ஆம் தேதி வரை மூன்று மாதங்களுக்கு பொதுமன்னிப்பு நடைமுறையில் இருக்கும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இந்த காலத்தில் அமீரகத்தில் சட்டத்திற்கு புறம்பாக தங்கியுள்ள தொழிலாளர்கள் தங்கள் ஆவணங்களை சரி செய்து, அமீரகத்தில் வேலை செய்யவோ அல்லது அபராதம் செலுத்தாமல் தாயகம் திரும்ப முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது பற்றி கூடுதல் அறிவிப்புகள் மற்றும் நடைமுறைகள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளன. கடந்த 2013 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட பொதுமன்னிப்பால் 62,000 பேர் வரையில் பயனடைந்தனர். இதுபற்றி கூடுதல் தகவல்கள் அறிய இலவச தொலைபேசி எண்ணும் விரைவில் அறிமுகம் செய்யபடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி: கலீஜ் டைம்ஸ்