Adirai pirai
articles islam உள்ளூர் செய்திகள்

அதிரை மரைக்கா பள்ளியை பார்த்து மற்ற பள்ளிகள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டிய விசயம்

அதிரை மரைக்கா பள்ளியில் அப்துல் லத்தீப் ஆலீம் அவர்களும் மக்கத்தம்பி காக்கா அவர்களும் 30 வருடங்களுக்கு முன் நோன்பு திறந்து வந்தார்களாம். வருடம் போக போக கொஞ்சம் கொஞ்சமாக நோன்பு திறப்பவர்களின் எண்ணிக்கை உயர்ந்து தற்போது 45, 50 பேரைக் கொண்டு நோன்பு திறக்கப்பட்டு வருகிறது. ஒரு நாளைக்கு ஒரு நபர் பொறுப் பேற்று தன் வீட்டிலிருந்து கஞ்சி காச்சியும், சிலர் பலகாரம், சிலர் ஜூஸ் போன்ற உணவுகளை வழங்கியும் இஃப்தார் ஏற்ப்பாடுகளை செய்து வருகிறார்கள். இதன் காரணமாக அந்த முஹல்லாவை சேர்ந்தவர்களுக்கும் 6 நோன்பு பிடிப்பதில் ஆர்வம் உண்டாகிறது.

தமாம் போன்ற நிகழ்ச்சிகளில் வழங்கப்படும் பிரியாணிக்கு லட்சக்கணக்கில் செலவிட்டு வரும் பள்ளிவாசல்களுக்கு மத்தியில், தமாம் நிகழ்ச்சியில் குறைந்த செலவில் லட்டு மட்டும் கொடுத்து இப்படி பயனுள்ள வகையில் நடந்துகொள்ளும் மரைக்கா பள்ளியின் செயல் நிச்சயம் அல்லாஹ்வுக்கு பிடித்தமானது.

படங்கள்: அபூபக்கர்