Adirai pirai
POLITICS உள்ளூர் செய்திகள்

தஞ்சையில் அதிரை திமுக வினர் கைது!

நாமக்கல்லில் ஆய்வு செய்ய வந்த ஆளுநருக்கு கருப்புக் கொடி காட்டி எதிர்ப்புத் தெரிவித்த திமுக செயல் தலைவர் ஸ்டாலினை போலீசார் கைது செய்தனர். இதனை கண்டித்தும் தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளர் தலைமையில் முன்னாள் மாவட்டப் பொருப்பாளர் து.செல்வம் அதிரை பேரூர் கழக துணைச் செயலாளர் A.M.Y.அன்சர்கான் மற்றும் கட்சி தொண்டர்கள் கழக நிர்வாகிகள் அனைவரும் ஸ்டாலினை உடனே விடுதலை செய்யக் கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது தஞ்சை காவல் துறை அனைவரையும் கைது செய்து தஞ்சை கொடி மரம் மார்க்கெட் அருகில் உள்ள V.S.திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டனர்.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy