Adiraipirai.in
இந்தியா

துபாயில் தூக்கிலிருந்து இந்தியர்களை காப்பாற்றும் ஹோட்டல்காரர்!

ஐக்கிய அரபு எமிரேட்டில் குற்றம் செய்பவர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படுகின்றன. இந்நாட்டுக்கு இந்தியாவை சேர்ந்த ஏராளமானோர் வேலைக்கு செல்கின்றனர். அங்கு போதிய அளவு சம்பளம் கிடைக்காமல், வேலை பறிபோகும் நிலையில் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். குறிப்பாக, கள்ளச்சாராய மாபியா கும்பல்களின் கையாட்களாக இவர்கள் மாறுகின்றனர். அப்ேபாது, இரு கும்பல்கள் இடையே வியாபார ரீதியாக மோதல் ஏற்பட்டு கொலையில் முடிகிறது. இதில் குழுவில் இடம் பெற்ற இந்தியர்களும் வழக்கில் சிக்குகின்றனர்.  இந்நாட்டில் கொலை குற்றம் செய்பவர்கள், கள்ளச்சாராயம் விற்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது. இந்நாட்டு சிறைகளில் இதுபோன்ற குற்றங்களை செய்த ஏராளமான இந்தியர்கள் உள்ளனர். துபாயில் ஓட்டல் நடத்தி வரும் பஞ்சாப்பை சேர்ந்த எஸ்.பி,்சிங் ஓபராய் என்பவர், இதுபோல் குற்றங்களை செய்து மரணத்தின் வாசலில் காத்திருக்கும் இந்தியர்களை காப்பாற்றுவதை சேவையாக செய்து வருகிறார்.

குற்றவாளிகளால் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு பெரிய தொகையை நஷ்டஈடாக கொடுக்கும் பட்சத்தில், குற்றவாளிகளுக்கு மன்னிப்பு அளிக்கும் சட்டம் ஐக்கிய அரபு எமிரேட்டில் இருக்கிறது. இதன் மூலம், பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் ஓபராய் பேச்சுவார்த்தை நடத்தி, பெரிய தொகையை நஷ்டஈடாக வழங்கி ஓபராய் இதுவரை 93 இந்தியர்களை தூக்கு தண்டனையில் இருந்து காப்பாற்றி இருக்கிறார். இவர்களில் பெரும்பாலோர் பஞ்சாப்பை சேர்ந்தவர்கள். இதுபோன்ற தண்டனைகளில் இருந்து இந்தியர்களை காப்பாற்ற இதுவரை ரூ.20 கோடி வரை நஷ்டஈடு வழங்கப்பட்டுள்ளது. இதுபோன்று காப்பாற்றப்பட்ட 14 பஞ்சாபியர் மற்றும் ஒரு பீகார்காரர் நேற்று பஞ்சாப் மாநிலம், ஜலந்தரில் தங்களுடைய துயரத்தை பகிர்ந்து கொண்டனர்.