Adirai pirai
உள்ளூர் செய்திகள்

அதிரையில் கலையான கடற்கரைத்தெருவை உருவாக்கும் தீனும் இஸ்லாம் இளைஞர் மன்றத்தினர்!

அதிரை கடற்கரைத்தெருவில் தீனும் இஸ்லாம் இளைஞர்கள் மன்றம் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனது. முஹல்லாவின் தேவைகளை நிறைவேற்றுவது, சுகாதாரம் சார்ந்த பிரச்சனைகளை பேரூராட்சியிடம் கோரிக்கையாக முன்வைப்பது, கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் போராட்டம் நடத்துவது என தொடங்கி பல்வேறு சமூக சேவைகளை ஆற்றி வருகின்றனர். அந்த வகையில் நேற்று இந்த மன்றத்தின் சார்பில் தெருவை பசுமையானதாக மாற்றும் வகையில் தெருவின் பல்வேறு இடங்களில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான இளைஞர்கள் கலந்துகொண்டு நிழல் தரக்கூடிய பயனுள்ள மரங்களை நட்டு வைத்தனர்.