Adirai pirai
articles FLASH NEWS உள்ளூர் செய்திகள்

வதந்திகளை பரப்ப வேண்டாம்!

நமதூரில் இன்று நடந்த ஓர் நிகழ்வை இதில் பகிர்கின்றேன்.

“நமதூரை சேர்ந்த ஒர் இளைஞர் முத்துப்பேட்டை சாலையில் விபத்திற்குள்ளாகி தலை சிதைந்து உயிரிழந்ததாக” ஓர் செய்தி இன்று மதியம் சமூக வளையங்களிள் அதிகளவில் பகிரப்பட்டது.

யாரோ ஒருவருக்கு கிடைத்த தகவலை அவர் ஆராயாமல் அப்படியே பரப்பியதன் விளைவாக. நடக்காத ஓர் நிகழ்வு நிகழ்ந்தது போல் நமதூர் மக்களிடையே இன்னும் பேசப்பட்டு வருகிறது.

ஒரு தகவல் நமக்கு வரும் பட்சத்தில் அது சரிதானா என்று ஆராயாமல் சமூக ஊடகங்களில் பதிவதனால் பலர் பதட்டத்திற்குள்ளாக நேரிடுகிறது.

ஊர்ஜிதம் செய்யப்படாத செய்திகளை பகிர்வதனால் நாம் யாருக்கு என்ன நன்மையும் இல்லை.

இனி வரக்கூடிய காலங்களில் இது போன்ற நிகழ்வு மீண்டும் நடக்காமல் பார்த்து கொள்ள வேண்டும்.