உஷாரய்யா உஷாரு: விபத்துக்கள் ஏற்படாமல் கார் ஓட்டுவது எப்படி?


 நான் கார் ஓட்டுவதில் புலி, 10 ஆண்டுகளுக்கும் மேலாக கார் ஓட்டி வருகிறேன் என்று கூறுவதெல்லாம் சரி. ஆனால், எத்தனை ஆண்டுகளானாலும் சிலருக்கு சரியான கோணத்தில் ஸ்டீயரிங் வீலை பிடித்து ஓட்டத் தெரியாது. இதுபோன்று, இருப்பவர்கள் இந்த பழக்கத்தை இனியாவது மாற்றிக் கொள்வது நலம். ஏர்பேக்குகள் பொருத்தப்பட்ட கார்களில் நீங்கள் சரியான இடத்தில் ஸ்டீயரிங் பிடித்து ஓட்டாவிட்டால் ஆபத்தை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது. எப்படி ஸ்டீயரிங் வீலை பிடித்து ஓட்ட வேண்டும் என்பதற்கான சில விஷயங்களை ஸ்லைடரில் காணலாம்.

1.நம்பிக்கை 
காரில் அமர்ந்து ஸ்டீயரிங் வீலை பிடிக்கும்போதே முழு நம்பிக்கையுடன் பயணத்தை துவங்குங்கள். சாலையின் மீதுள்ள கவனம் திசை திரும்பாமல் செல்வது அடிப்படையான விஷயம். நம்பிக்கையும், கவனமும் வந்துவிட்டாதா? அடுத்து ஸ்டீயரிங் வீலை எவ்வாறு பிடித்து ஓட்ட வேண்டும் என்பதை அடுத்தடுத்த ஸ்லைடுகளில் காணலாம்.

2.இது தப்பு 
இதுபோன்று வைத்து ஓட்டுவதை ஆட்டோமொபைல் துறையினர் தவிர்க்க வேண்டும் என்கின்றனர். இது மிகுந்த ஆபத்தை விளைவிக்கும். தொடர்ந்து படியுங்கள் உண்மை புரியும்.

3. சரியான கோணம் எதுவென்று கேட்கும்போது, 180 டிகிரி கோணத்தில் கைகளை வைத்து ஓட்டுவது சாலச் சிறந்தது. ஸ்டீயரிங் வீலின் மேற்புறத்தில் இரு கைகளையும் வைத்து ஓட்டுவது தவறு.

4.கைகள் பின்ன வேண்டாம்
 வளைவுகளில் திரும்பும்போது ஒரே கையால் ஸ்டீயரிங் வீலை முழுவதுமாக வளைப்பது தவறு. தவிர, குறுகலான சாலையிலும், யு டர்ன் போடும்போது, கைகளை ஸ்டீயரிங் வீல் முழுவதும் கொண்டு போய் பின்ன விடுவதும் தவறு. படத்தில் காட்டப்பட்டுள்ளது போன்று செய்யாமல் இரண்டு கைகளாலும் ஸ்டீயரிங் வீலை கொஞ்சம் கொஞ்சமாக திருப்ப வேண்டும்.

5.எது அனுபவம்? 
சின்ன வயசிலேர்ந்து கார் ஓட்டுறேன். எனக்கே இப்படி ஒரு அட்வைசா என்று ஒற்றை கையில் டிரைவிங் செய்பவர்கள் பழக்கத்தை உடனடியாக மாற்றிக் கொள்வது நலம். அவசர சமயங்களில் ஒற்றை கை டிரைவிங் கூடுதல் பதட்டத்தை ஏற்படுத்தும்.

6.இது தப்பு 
ஸ்டீயரிங் வீலில் 9 மற்றும் 2 ஆகிய இடங்களில் பிடித்து ஓட்டுவது ஆபத்தை விளைவிக்கலாம். இந்த முறைதான் ஏர்பேக் விரியும்போது உங்களது கை மற்றும் தலையில் காயத்தை ஏற்படுத்தும்.

7.இதுதான் சரியாம் 
ஸ்டீயரிங் வீலை கடிகாரத்துடன் ஒப்பிட்டு இதை கூறினால் உங்களுக்கு தெளிவாக புரியும். கடிகாரத்தில் 9 மற்றும் 3 ஆகிய இடங்களில் அதாவது கைகளை 180 டிகிரி கோணத்தில் பிடித்து ஓட்ட வேண்டும்.

8.இதுவும் ஓகே… 
நெடுஞ்சாலையில் செல்லும்போது, நீண்ட தூரம் ஓட்டும்போதும் மட்டும் இவ்வாறு ஓட்டுங்கள். அதாவது, கடிகாரத்தில் 8 மற்றும் 4 ஆகியவற்றில் பெரிய முள் இருப்பது போன்ற கோணத்தில். இது சோர்வை குறைக்கும் என்பதுடன், சவுகரியமாக இருக்கும்.

9.நோ மொபைல் 
ஸ்டீயரிங் வீலில் கையிருக்கும்போது கையில் மொபைல்போனை எடுத்து பேசுவது, எஸ்எம்எஸ் அனுப்புவது மிக மிக தவறான செயல்.

10.ரிவர்ஸ் சமயத்தில் 
ரிவர்ஸ் எடுக்கும்போது உடலை வளைத்து பின்புறம் பார்க்க வேண்டியிருக்கும். அப்போது ஒரு கை ஸ்டீயரிங் வீல் கொஞ்சம் மேலே வைத்துக் கொண்டு திருப்பினால் சவுகரியமாக இருக்கும்.

11.அமரும் இடைவெளி 
இருக்கையில் அமரும்போது ஸ்டீயரிங் வீலிருந்து உடம்பை 25 செமீ இடைவெளி இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

12.இனிதான பயணங்களுக்கு… ஸ்டீயரிங் வீலை மேற்சொன்ன வழிமுறைகளுடன் கையாள்வது சிறந்தது. அதற்காக, அப்படியே பிடித்துக் கொண்டு ஓட்டுங்கள் என்று சொல்லவில்லை. சாலைகள், டிரைவிங் நிலைகளுக்கு தக்கவாறு ஸ்டீயரிங் வீலை மாற்றி பிடித்து ஓட்டுவதற்கு பழகிக் கொள்ளுங்கள். எல்லா பயணங்களும் இனிதாக அமையும்.

Advertisement

Close