Adirai pirai
INFORMATION தமிழகம்

திருச்சியில் காணாமல் போன காஜாமியான் பள்ளி மாணவர் சிக்கந்தர் கிடைத்துவிட்டார்!

திண்டுக்கல்லை சேர்ந்த மாணவர் சிக்கந்தர். திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் உள்ள ஜமால் முஹம்மது கல்லூரி அருகில் காஜாமியான் பள்ளி விடுதியில் தங்கி 10 ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், (25-6-18) மாலை 5 மணியளவில் விடுதியை விட்டு வெளியில் சென்றவர் க்மணி வரை விடுதிக்கு திரும்பவில்லை. மாணவன் மாயமானது தொடர்பாக அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து பெற்றோர்கள் திருச்சிக்கு வந்து போலீசில் புகார் அளித்துள்ளனர்.

இது தொடர்பாக நேற்று அதிரைபிறையில் செய்தி வெளியிடப்பட்டது. இந்த நிலையில் மாயமான மாணவர் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே இருப்பதாக தகவல் கிடைத்து அங்கு அனைவரும் சென்று அவரை மீட்டனர். மாயமானதற்கான காரணம் கண்டுபிடிக்கப்படவில்லை.