Adirai pirai
INFORMATION Technology இந்தியா

ஜியோவுக்கு செக்… BSNL அறிவித்துள்ள ஒரு வருட சூப்பர் ஆஃபர்!

பிஎஸ்என்எல் தற்போது ஜியோவுக்கு போட்டியாக சலுகை ஒன்றை அறிவித்துள்ளது.  அதாவது, ரூ.1,999 விலையில் தினமும் 2 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்எம்எஸ் உள்ளிட்டவை சுமார் 365 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. மொத்தம் 730 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.

முதற்கட்டமாக பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இந்த புது சலுகை ரூ.1,999 சலுகை சென்னை மற்றும் தமிழ்நாடு வட்டாரங்களில் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. 

  ஆனால், ரூ.1,999 விலையில் ஜியோ வழங்கும் சேவையில் 180 நாட்களுக்கு 125 ஜிபி அதிவேக டேட்டா வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.