Adirai pirai
#interesting இந்தியா

ப்ளாஸ்டிக் தடையால் மீண்டும் பேமஸ் ஆகி வரும் சாப்பாட்டு கேரியர்!

10 ஆண்டுகள் முன்பு அலுவலகங்களுக்கு, தனியாக வீடு எடுத்து தங்கியிருக்கும் பேட்ச்லர்கள், வீட்டில் இருக்கும் பெரியவர்களுக்கு மதியம் வீடு தேடி கேரியர் சாப்பாடு ஒரு கூடையில் வரும். இந்த பழக்கம் கொஞ்சம் கொஞ்சமாக மாறி கேரியர் டிப்பன் பாக்ஸ் ஆகி, டிப்பன் பாக்ஸ் பார்சலாக மாறி கடைசியில் பார்சல் யூஸ் அண்ட் த்ரோ பிளாஸ்டிகாக உருமாறியது.

சாப்பாட்டை ஆர்டர் செய்தால் அது பிளாஸ்டிக் டப்பாவில் வரும். அதை சாப்பிட்டு விட்டு குப்பையில் எறிந்து விட்டு செல்லலாம். ஆனால், தற்போது மகாராஷ்ட்ராவில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், அந்த மாநிலம் முழுவதும் கேரியர் சாப்பாடு பழக்கம் மீண்டும் நடைமுறைக்கு வந்துள்ளது. பிளாஸ்டிக் ஒழிப்புக் கொள்கை பல்வேறு மாநிலங்களில் நடைமுறைக்கு வந்துக் கொண்டிருக்கிறது.

கடந்த 24 ஆம் தேதி முதல் மகாராஷ்டிராவில் இந்த சட்டம் அமலுக்கு வந்தது. இதனால் ஹோட்டலில் இருந்து உணவுகளை வீட்டிற்கு வாங்கி செல்வோர்களுக்கு சில்வர் கேரியர் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வீட்டிற்கு பார்சல் வாங்கி செல்வோர்களுக்கு ஆர்டர் செய்த உணவுகளை ஹோட்டல் உரிமையாளர்கள் கேரியரில் வைத்து அனுப்புக்கின்றனர். வாடிக்கையாளர்கள் அந்த கேரியரை எடுத்து சென்று சாப்பிட்ட பின்பு மீண்டும் ஹோட்டலுக்கு வந்து கேரியரை ஒப்படைக்கின்றனர். இந்த கேரியருக்கு முன்பணமாக 200 ரூபாயும் வாடிக்கையாளர்களிடம் வசூலிக்கப்படுகிறது.