Adirai pirai
articles உள்ளூர் செய்திகள்

அதிரையர்கள் படையெடுக்கும் குற்றாலம்… அதில் கரைந்து போகும் பெண்களின் மானம்!

ஆண்டுதோறும் ஜூன் மாதம் தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரை குற்றாலத்தில் சீசன் காலம். மேற்குத் தொடர்ச்சி மழைப்பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை பெய்யத் தொடங்கிவிட்டாலே குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து விடும். கடந்த ஒரு மாதமாகவே அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பறித்து கொட்டி வருகிறது.

அருவியில் தண்ணீர் நல்லா விழுது என்று செய்தியை கேள்விப் பட்டதுமே அனைவரும் குடும்பத்துடனும், நண்பர்களுடனும் கார்களிலும், வேன்களிலும் கூட்டமாக கிளம்பிவிடுவார்கள் குற்றாலத்திற்கு.

அநிஇதமான சாரல், மிதமான வெயில், குளுமையான காற்று இதுதான் குற்றாலத்தில் சீசன் தொடங்கியதற்கான அறிகுறி. அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுவதால் அங்கு குவிந்து வரும் சுற்றுலா பயணிகள் குதூகலத்துடன் நீராடி மகிழ்கின்றனர். குற்றாலத்தில் பாய்ந்து வரும் அருவிகளில் குளிப்பதென்பது உடலுக்கும் மனதுக்கும் ஆரோக்கியமான விஷயம் தான். அதில் எவ்வித சந்தேகமுமில்லை.

ஆனால் அங்கு ஆண்களும் பெண்களும் குளிக்கும் நிலை எவ்வாறு இருக்கிறது என்பதை நாம் சிந்திக்க கடமைபட்டுள்ளோம். அங்குள்ள நிலவரப்படி ஆண்கள் எந்த நிலையிலும் சுதந்திரமாக குளிக்க முடிகிறது. ஆனால் பெண்களின் நிலைதான் மிகவும் பரிதாபத்திற்குரியதாக இருக்கிறது. பெண்கள் குளிப்பதற்காக தனி இடம் ஒதுக்கி இருந்தாலும் அது அவ்வளவாக பாதுகாப்பு இல்லாத ஒன்றாகவே இருக்கிறது.

யார் வேண்டுமானாலும் பெண்களின் குளியலை பார்க்கலாம் என்கிற நிலை உள்ளது. இந்த சூழ்நிலையில் ஏராளமாக தவறுகள் நடந்து கொண்டிருக்கிறது என்பது தான் உண்மை. வக்கிரகுணம் கொண்ட ஆண்களின் பார்வைக்கு தினந்தோறும் பெண்களின் குளியல் விருந்தாகவே அமைந்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் செல்போன் கேமராக்கள் துவங்கி, சட்டை பட்டன் கேமரா, பாரைகளுக்கு நடுவே வைக்கப்பட்டும் கேமரா, மரங்களுக்கு இடையில் அதிக ஜூமிங் திறன் கொண்ட கேமராக்கள் உள்ளிட்டவற்ற பயன்படுத்தி ஏராளமான பெண்களின் அரைகுறை நிர்வாணக் காட்சிகள் (அவர்கள்

அறியாமலேயே) அங்கு படம் பிடிக்கப் படுகின்றன.

இதற்காக குற்றாலத்தில் சில கும்பல் அலைவதாக சமுக ஆர்வலர்கள், உள்ளூர் வாசிகள் அதிர வைக்கும் தகவல்களை தெரிவிக்கின்றனர். அதன்பின் பெண்கள் குளியல் வீடியோக்கள் ஃபேஸ்புக், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்களிலும், ஆபாச இணையதளங்களிலும் வெளியிடப்பட்டு ஏராளமானோரின் கண்களுக்கு விருந்தளிக்கப்படுகிறது. எனவே குற்றாலத்திற்கு சென்று குளிக்க விரும்பும் பெண்களே! தயவு செய்து தாங்களின் பாதுகாப்பு குறித்து சற்றே சிந்தியுங்கள். முக்கியமாக தாங்களின் கற்பு நிலைக்கு எவ்வித பங்கமும் ஏற்படாத சூழ்நிலையாக இருக்கின்றதா என தயவு செய்து ஆராய்ந்து அதன்பின் குளிப்பதற்கு முன் வாருங்கள். இல்லையேல் குற்றாலத்திற்கு சென்று அதன் இயற்கை அழகை ரசிப்பதோடு நிறுத்திக்கொண்டு குளியலை தவிர்ப்பது மிகவும் நல்லது.