Adirai pirai
FLASH NEWS உள்ளூர் செய்திகள்

களம் இறங்கிய அதிரை கடற்கரை தெரு இளைஞர்கள்!

அதிரை கடற்கரை தெரு பகுதியில் கடந்த சில நாட்களாகவே சாக்கடைகளில் குப்பைகளால் அடைப்பு ஏற்பட்டு சில இடங்களில் சாக்கடை நீர் சாலைகளில் ஓடுவதனால் மக்கள் மிகவும் பாதிப்பிற்குள்ளாகி உள்ளனர்.

இது தொடர்பாக அதிரை பேரூராட்சியிடம் முறையிட்டுள்ளனர் அப்பகுதி வாசிகள். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கபடாததினால்.

அப்பகுதி வாசிகளே களம் இறங்கி தூய்மை பணிகளை மேற்கொண்டுள்ளனர்.