Adirai pirai
உள்ளூர் செய்திகள்

அதிரையில் தகிடுதத்தம் போடும் சாலைகள்… முன்னாள் கவுன்சிலர் கோரிக்கை!

அதிராம்பட்டினம் 11வது வார்டு புதுத் தெரு, திலகர் தெரு, முத்தம்மாள் தெரு ஆகிய தெருக்களை கொண்டது. இந்த வார்டில் ஒரு முறை அன்சர்கானும், இருமுறை அவரது மனைவியும் தி.மு.க. உறுப்பினராக பணியாற்றியுள்ளனர்.

இந்நிலையில் இந்த வார்டில் புதுத் தெரு தென்புரம் உள்ள தார் சாலை, இதிலிருந்து தொடர்ச்சியாக ஜாவியா சாலை மற்றும் கிராணி மளிகை(மார்க்கெட்) சாலை வரை தார் சாலை அமைத்து தருவதற்கும் பல முறை மனுக்கள் கொடுத்தும் பயன் இல்லை. இதைப் பற்றி நிர்வாக அதிகாரியிடமும், தஞ்சை பேரூராட்சி உதவி இயக்குநர் அவர்களிடமும், எழுத்து மூலமாகவும், நேர் முகமாகவும் கூறி எவ்விதமான பயனும் இல்லை. அரசியல் காழ்ப்புணர்வுகளால் இந்த வார்டு ஒதுக்கப்பட்டு வருவதாக குற்றம் சாட்டப்படுகிறது.

இந்த நிலையில் அன்சர்கான் அவரது வார்டில் உள்ள முக்கியஸ்தர்களை அழைத்துக் கொண்டு அவர் பணியாற்றிய வார்டில் பழுதடைந்த சாலைகளை புதிதாக அமைத்துத் தரவேண்டி பேரூராட்சி சென்றார். ஆனால் இன்றும் பணிக்கு வராத நிர்வாக அதிகாரி இல்லாத காரணத்தினால் ,பேருராட்சியின் அதிகாரி, A.1இடம் மனுவை கொடுத்துள்ளார்.