Adirai pirai
exclusive உள்ளூர் செய்திகள்

அதிரை பேரூராட்சி அதிகாரிகளின் அதிரவைக்கும் அடுக்கடுக்கான ஊழல்கள்!

அதிரை பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெறும் ஊழல்களை திமுக நகர துணை செயலாளரும் முன்னாள் கவுன்சிலருமான அன்சர்கான் வெளியிட்டுள்ளார்.

இது குறித்து தெரிவித்துள்ள அவர்,

“தற்போது பேரூராட்சி நிர்வாகம் தற்போது சீர் கெட்டுப் போய் உள்ளது. நமது வரிப் பணம் களவாடப் படுகிறது எப்படி? என்றால்? பேரூராட்சிக்கு வார்டுகளுக்கு மின்சாரம்,குடிநீர், அலுவலகத்திற்கு தேவைப்படும் சாமான்கள் வாங்காமல் ,வாங்கியதாகவும்,

துப்புறவு பணியாளர்(NMR)ல் பணிபுரிய வேண்டியவர் 51 நபர்கள் ஆனால் 31நபர்கள் பணிபுரிந்தார்கள். பணிக்கு வராத இந்தப் பணியாளர்களை பணிக்கு வந்ததாக வருகை பதிவேட்டில் பதிவு செய்து கொண்டு மீதமுள்ள 20 நபர்களின் சம்பளத்தை பேரூராட்சி நிர் வாக அதிகாரி கையாடுகிறார்.

இந்தப் பணத்தை காசோலை(செக்)யில் 9900 ரூபாய், 9800 ரூபாய் ,10,000 ரூபாயிக்குள் தான் நிரப்பி மாதத்திற்கு பல தடவை ஆடிட்டிங்கில் சிக்காமல் அங்கு பணிபுரியும் ஓட்டுநர் இருவர் பெயரிலும், இந்த இரு ஓட்டுநரில் ஒரு ஓட்டுநர் மகனின் பெயரிலும் மக்களது வரிப்பணம் மாதா மாதம் சூரையாடப்படுகிறது.

இதைப்பற்றி அன்சர்கான் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் மேற்கூறிய விசயங்களை கேட்டதற்கு நிர்வாக அதிகாரியான ரமேஷ் அவர்கள் இதைப் பற்றி கேட்க உங்களுக்கு அதிகாரம் இல்லை என பதில் கொடுத்தாராம், பேரூராட்சியில் ஓட்டுநர்களாக பணிபுரியும் மாணிக்கம், குரு ஆகிய இருவரும் தற்போது ஓட்டுநராக பணிபுரிவதில்லை. இவர்கள் எப்பணியும் செய்யாமல் அலுவகப் பணியார்கள் அலுவலகத்தில் அமர்ந்து கொண்டு தணி சம்பளம் பெறுகின்றார்கள் இதற்கு இந்த நிர்வாக அதிகாரியும் உடந்தை.

இந்தப் பேரூராட்சியின் நிர்வாக சீர் கேட்டை இதற்குரிய மேல் அதிகாரிகள் இவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து, ஓட்டுநர்களை, ஓட்டுநர்களாக பணி செய்ய ஆவண செய்திடுவார்களா?அல்லது வரிப் பணத்தை இழக்கும் அதிரை மக்கள் சரி செய்வார்களா?”

இவ்வாறு அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.