Adirai pirai
உள்ளூர் செய்திகள்

#FLASH NEWS: காரைக்குடி-பட்டுக்கோட்டை ரயில் சேவை சோதனை ஓட்டம் தொடக்கம்!

காரைக்குடி- திருவாரூர் மார்க்கத்தில் அகல பாதை அமைப்பதற்காக  கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக ரயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. பல்வேறு கட்டங்களில் சிறிய பெரிய பாலங்கள் மற்றும் அகல ரயில் பாதை அமைக்கும் பணி காரைக்குடியில் இருந்து பட்டுக்கோட்டை வரை முடிவடைந்துள்ளது. இந்த வழித்தடத்தில் ரயில் பாதை பாதுகாப்பு ஆய்வுகள் முடிந்து வெள்ளோட்டமும், ஒரு நாள் கட்டண ரயில் சேவையும் நடத்தப்பட்டது.

இதையடுத்து இன்று இந்த ரயில்பாதையில் சோதனை ஓட்டம் தொடங்கியது. நாளை மறுநாள் முதல் தொடங்கப்படும் ரயில் சேவை திங்கள் மற்றும் வியாழகிழமைகளில் இயக்கப்படும் என தென்னக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.