Adirai pirai
POLITICS உள்ளூர் செய்திகள்

SDPI கட்சியின் மாநில செயலாளராக அதிரை வழக்கறிஞர் சஃபியா தேர்வு!

2018-2021 ஆண்டு காலத்திற்கான புதிய நிர்வாகிகள் தேர்தல் ஜூன் 30, ஜூலை 1 அன்று திருச்சியில் நடைபெற்றது இதில் நெல்லை முபாரக் தலைவராகவும், KKSM தெஹ்லான் பாகவி துணைத்தலைவராகவும், நிஜாம் முகைதீன் பொதுச்செயலாளராகவும், அஹ்மத் நவவி, அபுபக்கர் சித்தீக், அமீர் ஹம்ஸா, ரத்தினம் அண்ணாச்சி, சஃபிய்யா ஆகியோர் மாநில செயலாளராகவும் பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட வழக்கறிஞர் சஃபியா அவர்கள், அதிரையை சேர்ந்த வழக்கறிஞர் நிஜாம் அவர்களின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.