Adirai pirai
help உள்ளூர் செய்திகள்

காணாமல் போன அதிரை முதியவர் மாரியப்பன் கிடைத்துவிட்டார்!

அதிரை கரையூர் தெருவை சேர்ந்தவர் மாரியப்பன். கடந்த 30-6-18 சனிக்கிழமையன்று மதுக்கூரில் வாட்ச் மேன் வேலை செய்யப்போகிறேன் வீட்டில் கூறிவிட்டு வெளியில் சென்றுள்ளார். நேற்று காலை வீடு வந்து சேர வேண்டியவர் இரவு வரை வீடு திரும்பாததால் அவரது உறவினர்கள் பதற்றமடைந்தனர். இது தொடர்பாக அதிரை இணையதளங்களில் செய்தி வெளியிட்டனர். இந்த நிலையில் மாரியப்பன் மதுக்கூரில் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கு உதவி அனைவருக்கு அதிரை பிறையி சார்பாகவும், குடும்பத்தினரின் சார்பாகவும் நன்றியை தெரிவித்துகொள்கிறோம்.