Adiraipirai.in
POLITICS உள்ளூர் செய்திகள்

அதிரை நாம் மனிதர் கட்சி அலுவலகத்துக்கு வருகை தந்த அதிமமுக பொதுச்செயலாளர் பசும்பொன் பாண்டியன்!

அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளரும் மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞருமான செ.பசும்பொன் பாண்டியன் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் உள்ள நாம் மனிதர் கட்சியின் கிளை அலுவலகத்திற்கு இன்று வருகை தந்தார்கள். அவரை நாம் மனிதர் கட்சியின் தஞ்சை மாவட்டச் செயலாளர் M.A.சரபுதீன் மற்றும் கிளை நிர்வாகிகள் மரியாதை செலுத்தி வரவேற்றனர்.