Adiraipirai.in
INFORMATION தமிழகம்

பதற்றம் வேண்டாம், ரேசன் கார்டுகள் ரத்து செய்யப்படாது

தமிழக சட்டப்பேரவையில் இன்று திமுக உறுப்பினர் மா சுப்பிரமணியன் எழுப்பிய கேள்விக்கு, தமிழக அமைச்சர் காமராஜ் இந்த பதிலை அளித்தார்.

ரேசன் கார்டுகளை 3 மாதங்கள் பயன்படுத்தாவிட்டால் அட்டை ரத்து செய்யப்படும் என்று மத்திய அமைச்சர் கூறியிருந்தார். இது குறித்து மா சுப்பிரமணியன் எழுப்பிய கேள்விக்கு, அமைச்சர் காமராஜ் பதிலளித்தார். அப்போது, மத்திய அமைச்சர் கூறியிருந்தது அறிவுரைதான் என்றும் கொள்கை முடிவு இல்லை என்றும், மத்திய அரசின் இந்த அறிவுரையை தமிழக அரசு பின்பற்றாது என்றும் கூறினார்

மேலும், 3 மாதங்கள் ரேசன் பொருட்கள் வாங்கவில்லை என்றாலும், பிறகு ரேசன் பொருட்கள் வழங்கப்படும் என்றும், 3 அல்ல 5 மாதங்கள் ரேசன் பொருட்கள் வாங்கவில்லை என்றாலும் ரேசன் அட்டை ரத்து செய்யப்பட மாட்டாது என்று காமராஜ் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்!