Adiraipirai.in
sports உள்ளூர் செய்திகள்

உலக வலுதூக்கும் போட்டிக்கு அதிரை காதிர் முகைதீன் கல்லூரி மாணவி லோகப்பிரியா தகுதி

அகில இந்திய  வலுதூக்கும் போட்டி ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளத்தில் நடந்தது. இதில் 300க்கும் மேற்பட்ட வீரர்களும், 250க்கும் மேற்பட்ட வீராங்கனைகளும் கலந்து கொண்டனர். தமிழகம் சார்பாக தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை பெரியார் உடற்பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற அதிராம்பட்டினம் காதர்முகைதீன் கல்லூரியில் பிபிஏ இரண்டாமாண்டு படிக்கும் மாணவி எஸ்.லோகபிரியா  57 கிலோ உடல் எடைபிரிவில் 357.5கிலோ கிலோ எடையை தூக்கி முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் வென்றார். அதே பெரியார் உடற்பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற திருச்சி பிஷப்ஹீபர் கல்லூரியில் பி.காம் முதலாமாண்டு  படிக்கும் மாணவர் கே.கோகுல்பிரசாத் 93 கிலோ உடல் எடைபிரிவில் 510 கிலோ எடையை தூக்கி நான்காமிடம் பெற்றார்.

இவரை பட்டுக்கோட்டை எம்.எல்.ஏ. சேகர் நேரில் அழைத்து பாராட்டினர். தங்கப்பதக்கம்  வென்ற மாணவி லோகபிரியா  தென்னாப்பிரிக்காவில் வரும் செப்டம்பர் 2ம் தேதி முதல் 6 வரை நடைபெறவிருக்கும் உலக வலுதூக்கும் போட்டியில் இந்தியா சார்பில் கலந்து கொள்ள உள்ளார் என்பது  குறிப்பிடத்தக்கது. இவருக்கு அதிரை பிறையின் சார்பாக பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.