Adiraipirai.in
help தமிழகம்

9 வயது சிறுவன் தர்வேஷ் அஹமதுவின் இதயத்தில் அடைப்பு… உயிர்காக்க உதவிடுங்கள்!

காஞ்சிபுரம் மாவட்டம், கானாத்தூர் ரெட்டிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் சையத் கலீம். தையல் கடை நடத்தி வருகிறார். இவருடைய 9 வயது மகன் தர்வேஷ் அஹமதுவுக்கு பிறக்கும் போதே இதய பிரச்சனை இருந்து வந்தது. இதயக்குழாய் இல்லாததால், சிறுவயதிலேயே அவருக்கு செயற்கை குழாய் பொருத்தப்பட்டுள்ளது. அத்துடன் இதயத்தில் ஓட்டைகளும் அறுவை சிகிச்சை மூலம் குணமாக்கப்பட்டுள்ளன.

படம்: தந்தை கலீமுடன் தர்வேஷ் அஹமது

இந்த நிலையில், இவரது இதயத்தில் தற்போது அடைப்பு ஏற்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது இதயத்துடிப்பு குறைந்துள்ளதால் அதனை கண்டறிய நிரந்தர பேஸ்மேக்கர் கருவியை பொறுத்த வேண்டும் மருத்துவர்கள் அறுவுறுத்தியுள்ளனர். இதற்காக வரும் 10 ஆம் தேதி தர்வேஷ் அஹமது மருத்துவமனையில் அனுமதிக்கப்படவுள்ளார். இந்த கருவிக்கு ரூ.3,00,000 வரை தேவைப்படும் என மருத்துவமனை தெரிவித்துள்லாது. தையல் பணி செய்து வரும் சைது கலீம் தன்னுடைய மகனை காக்க போராடி வருகிறார். ஆனால், இந்த பெரிய தொகையை செலுத்த இயலாத நிலையில் அவர் உள்ளார். இந்த சிறுவன் தர்வேஷ் அகமதுவின் அறுவை சிகிச்சைக்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்யுமாறு அதிரை பிறை சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

அலைபேசி எண்: 9677292928

வங்கி கணக்கு எண்:

Name: Syed kaleem H

Karur vysya bank,

Palavakkam Branch,

A/c no,1621155000041558,

Ifsc code kvbl0001621

micr 9677292928 600053041

விசாரணை மற்றும் பதிவு: நூருல் இப்னு ஜஹபர் அலி

சிகிச்சை தொடர்பான ஆவணங்கள்: