Adirai pirai
உள்ளூர் செய்திகள்

அதிரை பேரூராட்சி, காவல் நிலையம், மின்சார வாரியம் சென்று கடற்கரைத்தெரு நிர்வாகிகள் கோரிக்கை!

அதிரை கடற்கரைத்தெரு முஹல்லாவின் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பு கூட்டம் கடந்த 20/6/18 அன்று நடைபெற்றது. இதில் அப்துர் ரஜாக் தலைமையிலான புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இந்த நிலையில், இந்த புதிய நிர்வாகிகள், மற்றும் கடற்கரைத்தெரு முஹல்லாவாசிகள் இன்று அதிரை பேரூராட்சி அலுவலகம், காவல் நிலையம், மின்சார வாரியம் ஆகியவற்றுக்கு சென்று மரியாதை நிமித்தமாக சந்தித்தனர். அப்போது புதிய நிர்வாகிகள் அடங்கிய பட்டியலை வழங்கி, முஹல்லா சார்ந்த பல்வேறு கோரிக்கைகள் அவர்கள் முன் வைத்தனர்.