Adirai pirai
articles உள்ளூர் செய்திகள்

காயல்பட்டினத்தில் ஒரே வலிமா விருந்தில் 17 திருமணங்கள்.. அதிரையில் பின்பற்றலாமே?

காயல்பட்டிணத்தில் மொத்தம் 17 திருமணங்கள் ஒரே விருந்தில் நடக்கவிருக்கின்றன. மணமக்கள் குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து மொத்தமாக சேர்ந்து ஒரே வலிமா விருந்து நடத்துவதால் நடுத்தர மற்றும் ஏழைகள் இதனால் பெரும் பயண்டைகின்றனர். திருமண செலவுகளை நினைத்து பெண்களை பெற்றெடுத்த பெற்றோர்கள் கண்கலங்கி நிற்கவேண்டிய அவசியம் இல்லை. திருமண விருந்துகளின் போது உணவு வீணாவதையும் தடுக்கலாம்.

கல்யாணத்திற்காக யாரிடமும் கையேந்தும் நிலையை அடியோடு ஒழிப்போம். திருமண பொருளாதார சுமையை குறைக்கும் இந்த அருமையான திட்டத்தை நமதூரிலும் செயல்படுத்தினால் என்ன?