Adirai pirai
FLASH NEWS உள்ளூர் செய்திகள்

FLASH NEWS: முத்துப்பேட்டை தர்கா அருகே பயங்கர தீ விபத்து!

முத்துப்பேட்டை தர்காவை ஒட்டி ஏராளமான கடைகள் உள்ளன. அந்த வணிகவளாகத்தில் உள்ள டீ கடையின் அருகே அமைந்துள்ள மின்கம்பத்தில் மின்கசிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்குள்ள அந்த கடையில் தீ விபத்து ஏற்பட்டு அடுத்தடுத்து உள்ள 2 கடைகளுக்கும் பரவியது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் பொதுமக்கள் உதவியுடன் தீயை கட்டுப்படுத்தினர். இந்த தீவிபத்தில் 3 கடைகளில் இருந்த பொருட்கள் முற்றிலும் எரிந்து சாம்பலாயின.