Adirai pirai
exclusive FLASH NEWS posts உள்ளூர் செய்திகள்

அதிரை பேரூர் அதிகாரியின் அடாவடி பேச்சு.!

அதிரையை சேர்ந்த சமூக ஆர்வலர் அப்துல் ஹாலிக் என்பவர் கடைத்தெரு சாலையில் பல நாட்களாக வழிந்தோடும் கழிவு நீர் வாய்கால் சுத்தம் செய்ய கோரி பொது நல மனு ஒன்றை பேரூராட்சிக்கு எடுத்து சென்றுள்ளார்.அங்கிருந்த சுகாதாரத்துறை ஆய்வாளர் “உங்களுக்கு இதே வேலையா போச்சி. முதலில் ஊரை திருத்துங்க பின்னர் எங்களை கேள்வி கேளுங்கள்” என அடாவடியாக பேசியுள்ளார் என்று சம்பந்தப்பட்ட சமூக ஆர்வலர் நம்மிடையே பகிர்ந்து கொண்டார். பின்னர் அவர் எடுத்து சென்ற மனுவை சுகாதாரத்துறை ஆய்வாளர் பெற்று கொண்டார்.முறையாக புகார் அளிப்பதில் என்ன தவறு இருக்கின்றது என்பதே நமது கேள்வியாக உள்ளது.இந்த சமூக ஆர்வலர் அரசாங்கத்திடமிருந்த சம்பளம் பெற்று வேலை செய்ய வில்லை. நம் பணத்தை கொண்டுதான் அந்த அரசு அதிகாரி வேலை செய்கிறார் என்பதை என்றுஉணர்வாரோ?