Adirai pirai
Alert உள்ளூர் செய்திகள்

அதிரை கரையூர் தெருவில் கரைந்த நிலையில் காணப்படும் மின்கம்பம்!

அதிரை கரையூர்தெரு நுழைவு வாயிலான பீயாத்து பாலம் அருகில் TP 267 என்ற எண் உள்ள மின் கம்பம் சிதிலமடைந்து ஒரு பக்கம், முழுவதும் அறிக்கப்பட்டு உள் கம்பிகள் வெளியில் தெரிந்த வண்ணம் உள்ளன. ஆபத்தான நிலையில் உள்ள இக்கம்பத்தை கடந்து செல்ல அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். எனவே சம்மந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் இது குறித்து உரிய நடவடிக்கை எடுத்து புதிய மின் கம்பத்தை மாற்றித்தரும்படி கோரிக்கை விடுத்துள்ளனர்.