Adirai pirai
POLITICS உள்ளூர் செய்திகள்

மறைந்த அதிரை திமுக பிரமுகர் மீராசாவின் உடலுக்கு முன்னாள் அமைச்சர் பழனிமாணிக்கத்தின் தம்பி அஞ்சலி!

திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூத்த உறுப்பினரும், நகர தந்தையும், இன்றும் தஞ்சை மாவட்டப் பிரதிநிதியாகவும் பொறுப்பு வகித்த அதிரை மேலத்தெருவை சேர்ந்த முகம்மது மீராசா அவர்கள் நேற்றைய தினம் வஃபாத் அகிவிட்டார்கள். அவருடைய உடல் இன்று மாலை 4:30 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. இந்த நிலையில், மேலத்தெருவில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள மீராசா அவர்களின் உடலுக்கு முன்னாள் மத்திய இணை அமைச்சர் பழனிமாணிக்கத்தின் தம்பி, S.S.ராஜ்குமார் திமுக கொடியை போர்த்தி அஞ்சலி செலுத்தினார். அவருடன் திமுக நகரை செயலாளர் குணசேகரன், துணை செயலாளர் அன்சர் கான், ஒன்றிய சிறுபாண்மை அமைப்பாளர் மரைக்கா இத்ரீஸ் மற்றும் பலர் உடனிருந்தனர்.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy