Adirai pirai
உலகம்

இந்தோனேசியாவில் பாலியல் தொழில் செய்தவர்களுக்கு மக்கள் முன்பாக பிரம்படி தண்டனை!

இந்தோனேசியாவில் ‘‌ஷரிபர்’ எனப்படும் இஸ்லாமிய சட்டம் கடைபிடிக்கப்படுகிறது. மது குடித்தல், சூதாட்டம், கற்பழிப்பு, ஓரின சேர்க்கை உள்ளிட்டவை குற்றமாக கருதப்படுகிறது.மேற்கண்ட குற்றங்களில் ஈடுபடுபவர்கள் பொதுமக்கள் முன்னிலையில் பிரம்பு அடி மூலம் தண்டிக்கப்படுகிறார்கள்.

இந்த நிலையில், இந்தோனேசியாவின் ஆஷே மாகாணத்தில் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக சிலர் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு ஷரியத் சட்டப்படி சிறைத்தண்டனையும், பொதுமக்கள் முன்னிலையில் பிரம்பால் அடிக்கப்பட வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதன்படி பாலியல் தொழிலில் ஈடுபட்ட 2 பெண்கள் மற்றும் 2 ஆண்களுக்கு பிரம்படி தண்டனை வழங்கப்பட்டது. தொடர்ந்து அவர்கள் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.