Adirai pirai
உள்ளூர் செய்திகள்

அதிரை வந்தது தமிழக அரசின் புதிய பேருந்து!

தமிழக போக்குவரத்து கழகத்தில் தனியார் பேருந்துகளை மிஞ்சும் வகையில், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புதிய பேருந்துகள் வாங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் முதற்கட்டமாக 515 புதிய அரசு பேருந்து சேவை இன்று தொடங்கப்பட்டது. தலைமை செயலகத்தில் நடைபெற்ற இந்த விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.இந்த நிலையில் ராமேஸ்வரம் தொடங்கி, ஈசிஆர் சாலை வழியாக அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, நாகூர் இடையே செல்லும் அரசு பேருந்து இன்று இயக்கப்பட்டது. அனத பேருந்து நிலையம் வந்தடைந்த இந்த பேருந்தை பொதுமக்கள் ஆவலுடன் பார்த்தனர்.