Adirai pirai
posts

அதிரை SSMG கால்பந்தாட்ட தொடரின் இறுதிப்போட்டியில் தஞ்சை அணி வெற்றி!

அதிரை SSM குல் முஹம்மது நினைவாக கடற்கரைத்தெரு மைதானத்தில் ஆண்டு தோறும் நோன்பு பெருநாள் மாலை கால்பந்தாட்ட தொடர் தொடங்கி நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டு நோன்பு பெருநாள் ஆன்று மாலை இத்தொடர் நடைபெற்றது. கடந்த 3 வாரங்களாக விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில் பல்வேறு ஊர்களில் இருந்து தலைசிறந்த அணிகள் கலந்துகொண்டனர். இதில் இறுதி போட்டிக்கு அதிரை SSMG குல் முஹம்மது அணியினரும், நேதாஜி தஞ்சாவூர் அணியினரும் தகுதி பெற்றனர். இன்று மாலை நடைபெற்ற இறுதிப்போட்டியில் இரு அணி வீரர்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

இதில் தஞ்சை நேதாஜி அணியினர் 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றி அசத்தினர்.