Adirai pirai
articles உள்ளூர் செய்திகள்

நம்மூரை சுத்தமாக்க நறுக்கென்ற 4 ஐடியாக்கள்!

1. நமதூரில் விளையாட்டுப் போட்டிகள் நடக்கும் மைதானத்தை சுத்தி நெகிழிக் குப்பைகள். தற்போது நடந்து வரும் கால்பந்து போட்டியின் போது மைதானத்தில் ஐஸ்க்கிரீம் வாங்கிவிட்டு பழக்க தோசத்தில் குப்பைத் தொட்டியைத் தேடினேன். அப்போது தோன்றியது: போட்டிகளை நடத்துபவர்கள் குப்பைக் தொட்டி வைப்பதும் அவர்களின் பொறுப்பு. அக்குப்பைத்தொட்டியில் குப்பைகளைப் போடச் சொல்லி தினமும் போட்டி நடக்கும் போது அறிவிக்கவும் வேண்டும்.

2. திருமண வீடுகளுக்கு பாத்திரங்கள் வாடகைக்கு வழங்குபவர்கள், (அல்லது யாரேனும் இதை பகுதி வருவாயாக, சேவையாகவோ செய்யலாம்) குப்பை தொட்டிகளை குறிப்பிட்ட நாட்களுக்கு குப்பைத் தொட்டிகளை விசேசம் நடக்கும் இடங்களுக்கு வாடகைக்கு கொடுக்க வேண்டும். திருமணம் நடந்த வீடுகள் அருகில் ஒன்றிரண்டு நாட்கள் கழித்து சென்றிருக்கிறீர்களா?

முக்கியமாக வாடகைக்கு வழங்குபவர்கள் அக்குப்பைத் தொட்டியை நன்றாக பராமரிப்பது அவசியம்.சுவச் பாரத் வரி போன்று திருமணத்தை எழுதும் அமைப்புகள் இதற்கென்று தனியாக கட்டணம் வசூலித்து இவற்றை நடைமுறைப்படுத்தலாம்.

3. புதிதாக வீடு குடி போனவர்களுக்கு அவசியம் ஏதாவது செய்யனுமே என்பவர்கள், ஒன்றிரண்டு குப்பைத் தொட்டிகளை பரிசாக வழங்கலாம். இன்னும் சொல்லப்போனால் பள்ளி மாணவர்களுக்கு பரிசுப் பொருட்களாக சிறிய குப்பைத் தொட்டியிலிருந்து பெரிய அளவு வரை பரிசாக வழங்கி சுகாதாரத்தின் அவசியத்தை உணரச் செய்யலாம்.

4. புதிதாக வீடுகள் கட்டுபவர்கள் வீட்டு வாசலில் குப்பை போடுவதற்கென ஒரு சிறிய அறை (1 1/2 அடி?) போன்ற ஒன்றை கட்டவேண்டும். ஒருபக்கம் போட்டால் குப்பை அள்ளுபவர்கள் திறந்து எடுத்துச் செல்லுமாறு இருக்குமாறு அமைக்கலாம்.

சுவச் பாரத் தளத்தில் படித்த தகவல்: குப்பைத் தொட்டி வைப்பதோடு பணி முடிவடையாது. உணவுகள் பாத்திரங்களை தினமும் கழுவி பராமரிப்பது போன்று குப்பைத் தொட்டிகளையும் கழுவி உலர வைக்கவேண்டும்.

ஆக்கம்: முகம்மது மாகிர் (சிங்கப்பூர்)

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy