Adirai pirai
exclusive FLASH NEWS sports உள்ளூர் செய்திகள்

அதிரையில் வெகு சிறப்பாக துவங்கிய AFFA கால்பந்து தொடர் போட்டி!

அதிரையில் வெகு சிறப்பாக துவங்கிய AFFA கால்பந்து தொடர் போட்டி!

அதிரை ஃப்ரண்ட்ஸ் ஃபுட்பால் அஷோசியேசன் (AFFA) நடத்தும் 15ஆம் ஆண்டு மாநில அளவிலான மாபெரும் கால்பந்து தொடர்ப்போட்டி இன்று 08.07.2018 கிராணி மைதானத்தில் வெகு சிறப்பாக துவங்கியது.

இப்போட்டிகளில் பங்கேற்பதற்காக பல ஊர்களில் இருந்து பல தலைசிறந்த அணிகள் பதிவு செய்துள்ளனர்.

துவக்க நாளை முன்னிட்டு சிறப்பு விருந்தினர்களுக்கு வீரர்களை அறிமுகம் செய்யப்பட்டது.அதனை தொடர்ந்து புலூஸ் வேலங்குடி அணியினரும் மதுரை அணியினரும் போட்டியில் களமிறங்கினார்.

இன்றைய ஆட்டத்தின் முடிவில் வேலங்குடி அணியினர் மதுரை அணியினர்க்கு 3-1என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றனர்.

இப்போட்டியினை காண ஏராளமான ரசிகர்கள் அரங்கை சூழ்ந்துள்ளனர்.