Adirai pirai
Alert உள்ளூர் செய்திகள்

மக்களை முகம் சுழிக்க வைக்கும் அதிரை இந்தியன் வங்கி ATM!

அதிரையில் முக்கிய வங்கிகளான பாரத ஸ்டேட் வங்கி, கனரா ஆகிய வங்கிகளின் ஏ.டி.எம் எந்திரங்களில் பணம் இல்லாததால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அவசரமாக பணம் எடுக்க வந்தவர்கள் ஏ.டி.எம் எந்திரங்களில் பணம் இல்லாததால் ஒவ்வொரு வங்கி ஏ.டி.எம் மையங்களுக்கு பணம் எடுக்க அலைந்து ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர். இதில் சேர்மன் வாடியில் அமைந்துள்ள இந்தியன் வங்கி மட்டும் தான் கொஞ்சம் விதிவிலக்கானது.

மற்ற ஏடிஎம் களை ஒப்பிடுகையில் இங்கு பெரும்பாலான நேரங்களில் பணம் இருப்பதால் பல வங்கி வாடிக்கையாளர்கள் இந்தியன் வங்கி எடிஎம் மையத்திற்கே நம்பிக்கையுடன் செல்கின்றனர். அதிகமான மக்கள் வந்து செல்லும் இந்த மையம் முறையான பராமரிப்பு இன்றி காணப்படுகிறது. பணம் எடுத்ததற்கான ரசீதுகள் அனைத்தும் குப்பைத்தொட்டியில் அல்லாமல் கீழே கிடக்கின்றன. மையத்தின் தரை, சுவர் எங்கும் பாக்கு போட்டு துப்பிய கரை தென்படுகிறது. ஏசி பழுதடைந்த நிலையிலே இருப்பதால், உள்ளே வருபவர்கள் பணத்துடன் வியர்வையையும் இலவச இணைப்பாக பெற்று செல்கின்றனர்.

பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் இந்த ATM மையத்தை வங்கி நிர்வாகம் முறையாக பராமிக்க வேண்டும் என்பதே வாடிக்கையாளர்களின் கோரிக்கையாக உள்ளது.