Adirai pirai
உள்ளூர் செய்திகள்

அதிரை சமூக ஆர்வலர் ஹாலிக் மரைக்காவுக்கு விருது வழங்கி கவுரவித்த ரோட்டரி சங்கம்

அதிரை நடுத்தெரு கீழ்புறத்தை செர்ந்த ஹாலிக் அவர்கள் கடந்த 17 ஆண்டுகளுக்கும் மேலாக அதிரையில் உள்ள குறைகள் பொறுப்பில்லாமல் நடக்கும் அதிகாரிகள் மின்சார்ந்த பிரச்சனைகள், சாலை பிரச்சனைகள், சுகாதார பிரச்சனைகள் உள்ளிட்டவற்றை மேலதிகாரிகளுக்கு புகார் கடிதங்களாக அனுப்பி வருகிறார்.இவருடைய புகார் கடிதங்களுக்கு பதில் கடிதங்கள் வருவதுடன் பல கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. நேற்றைய தினம் அதிரை ஜாவியால் சாலை மாற்றப்பட்ட ஆபத்தான் மின்கம்பங்கள் மற்றும் மின்மாற்றிகம்பங்கள் ஆகியவை இவர் சமீபத்தில் அனுப்பிய புகார் கடிதங்களால் ஏற்பட்டவையாகும்.இந்த நிலையில் இவருடைய சேவையை பாராட்டும் வகையில் இன்று அதிரை ரோட்டரி சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதியேற்பு விழாவில் சிறந்த சமூக சேவகருக்கான விருது வழங்கி கவுரவிக்கப்பட்டார்.