Adirai pirai
உள்ளூர் செய்திகள்

அதிரையில் சிறப்பாக நடைபெற்ற ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா!

அதிரை ரோட்டரி சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா பவித்ரா திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில், முஹம்மது சம்சுத்தீன் அவர்கள் தலைவராகவும், அஹமது மன்சூர் அவர்கள் செயலாளராகவும், சாகுல் ஹமீது அவர்கள் பொருளாளராகவும் பதவியேற்றுக்கொண்டனர். முன்னதாக முன்னாள் தலைவர் ஆறுமுகம் நிகழ்ச்சிக்கு வரவேற்புரையாற்ற, முன்னாள் செயலாளர் நவாஸ்கான் ஆண்டறிக்கையை வாசித்தார். தொடர்ச்சியாக 13-வது மண்டல ரோட்டரி சங்க துணை ஆளுநர் திருநாவுக்கரசு அவர்கள் புதிய ரோட்டரி சங்க நிர்வாகிகளை இணைத்து வைத்து வாழ்த்துரை வழங்கினார். இதில், தஞ்சை ரோட்டரி சங்கத்தை சேர்ந்த குணசேகரன் தலைமை விருந்தினராக கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்., காதிர் முஹைதீன் கல்லூரி தாளாளர் அபுல் ஹசன், முன்னாள் துணை ஆளுநர் நியூட்டன், மண்டல செயலாளர் சந்தகுமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.நிகழ்ச்சியின் முக்கிய நிகழ்வாக சமூக ஆர்வலர்கள், சேவை அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy