Adirai pirai
Alert உள்ளூர் செய்திகள்

அதிரை பேருந்து நிலையத்தில் மக்களை விழுங்க காத்திருக்கும் ஆபத்தான பள்ளம்

அதிரை பேருந்து நிலையம் பின்புறம் கடைத்தெரு செல்லும் சாலையோரம் கழிவு நீர் தேங்கியபடி பல வருடங்களாக ஒரு பெரிய பள்ளம் உள்ளது. இந்த பள்ளம் பல வருடங்களாக பேரூராட்சி நிர்வாகத்தால் கண்டுக்கொள்ளப்படாமல் உள்ளது. அனைத்து நேரங்களிலும் மக்கள் அதிகம் கூடும் முக்கியமான இந்த இடத்தில் உள்ள ஆபத்தான பள்ளம் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாகவே உள்ளது.மேலும் இப்பள்ளத்தில் கழிவு நீர் தேங்குவதால் கொசுத்தொல்லையும் சுகாதார கேடும் ஏற்படுகிறது. கடந்த 2015 ஆண்டு இப்பள்ளத்தில் ஒரு சிறுவன் சைக்கிளுடன் கீழே விழுந்து அங்கிருந்தவர்களால் காப்பாற்றப்பட்டான். அது குறித்து நமது தளத்தில் அன்றைக்கே செய்தி வெளியிட்டு பேரூராட்சி நிர்வாகத்திடம் நேரடியாக புகாரும் அளித்தோம். இருப்பினும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இது குறித்து சம்பந்தப்பட்ட நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.