Adirai pirai
உள்ளூர் செய்திகள்

அதிரையில் சிறப்பாக நடைபெற்ற லயன்ஸ் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா!

அதிரை லயன்ஸ் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நேற்று மாலை 6:30 மணிக்கு சாரா திருமண மண்டபத்தில் முஹம்மது முகைதீன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில், புதிய தலைவராக பேரா.அப்துல் காதர் அவர்களும், செயலராக சூப்பர் ஸ்டூடியோ அப்துர்ரஹ்மான் அவர்களும், பொருளாளராக அப்துல் ஜலீலுத்தீன் அவர்களும் பொறுப்பேற்றுக் கொண்டனர். இவர்களுடன் பல்வேறு புதிய இணை, துணை பொறுப்புகளுக்கான நிர்வாகிகள் பதவிவேற்றுக்கொண்டனர்.

இவர்களை லயன்ஸ் சங்கத்தின் இரண்டாம் துணை ஆளுநர் சேதுக்குமார் அவர்கள் பணியில் அமர்த்தினார். புதிய உறுப்பினர்களை முன்னாள் மாவட்ட ஆளுநர் ராஜகோபால் சங்கத்தில் சேவைத்திட்டங்களை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மண்டலத்தலைவர் ஶ்ரீராம், வட்டார தலைவர் துரைராஜ் ஆகியோர் கலந்துகொண்டு கருத்துரை வழங்கினார். காதிர் முஹைதீன் கல்லூரி பேராசிரியரும், லயன்ஸ் சங்க இயக்குனர்களில் ஒருவருமான செய்யது அஹமது கபீர் அவர்கள் இவ்விழாவில் இணைப்புரையாற்றினார்.

இதில் மேலும் ஒரு முக்கிய நிகழ்வாக, பல்வேறு சமூக பணிகளில் தங்களை ஈடுபடுத்திக்கொண்ட அதிரையர்களுக்கு சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்பட்டது. குறிப்பாக ஜித்தா தமிழ் சங்கத்தின் நிறுவனர் ராஃபியா, சுகாதார முன்னேற்ற கழகத்தை சேர்ந்த இயற்கை ஆர்வலர் தமீம் உள்ளிட்ட பலருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy