Adiraipirai.in
exclusive உள்ளூர் செய்திகள்

அதிரை CMP லேனில் வீட்டில் நுழைந்த மர்ம நபர் யார்? CCTV கேமராவில் பதிவான உருவம்

https://youtu.be/caX1-TOrWrI

அதிரை CMP லேனில் இமாம் ஷாபி பள்ளி அருகே உள்ள ஒரு வீட்டின் கொல்லை பகுதியில் கொடிகளில் காயப்போட்டிருக்கும் ஆடைகள், மற்றும் சிறிய பொருட்கள் காணாமல் போய் கொண்டிருந்தன. இதையடுத்து அந்த வீட்டை சேர்ந்தவர்கள் அங்கு CCTV கேமராவை பொறுத்தினர். இருப்பினும் தொடர்ந்து வீட்டிற்குள் யாரோ ஏறி குதிப்பதை போல் வீட்டில் இருக்கும் பெண்கள் உணர்ந்துள்ளனர்.

ஆனால் எந்த பொருளும் திருட்டு போகாததால் அதை அவர்கள் பெரிதாக பொருட்படுத்தவில்லை. இந்த நிலையில் நேற்று முன் தினம், கொல்லை பகுதியில் ஒரு மர்ம நபர் ஏறிகுதிப்பை அந்த வீட்டை சேர்ந்த பெண் பார்த்து கூச்சலிட்டுள்ளார். சுதாரித்துக்கொண்ட நபர் எந்த பொருளையும் எடுக்காமல் அங்கிருந்து சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

இந்த காட்சி அங்கு பொறுத்தப்பட்டிருந்த CCTV கேமராவில் பதிவானது. அதில் வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர் எந்த சலனமும் இல்லாமல், நோட்டமிட்டவாறு செல்கிறார். இதன் மூலம், அந்த நபர் திருடுவதற்காக வந்தவரா? அல்லது வீட்டை நோட்டமிடுவதற்காக ஏறி குதித்தாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

https://youtu.be/caX1-TOrWrI