Adirai pirai
உள்ளூர் செய்திகள்

அதிரை புதிய அகல ரயில்தடத்தில் முதன் முதலில் வருகை தந்த சரக்கு ரயில்

காரைக்குடி – திருவாரூர் இடையே 147 கி.மீ. தொலைவுக்கு ரூ. 711 கோடி செலவில் அகல ரயில் பாதை அமைத்தல் மற்றும் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒருபகுதியாக,  தஞ்சாவூர் மாவட்டம், அதிரை ரயில் நிலையத்தில் கட்டுமானப்பணிகள் கடந்த 3.7.2017 -ல் தொடங்கி நடைபெற்று வருகிறது.சுமார் ரூ. 3.5 கோடி மதிப்பீட்டில், 65 மீட்டர் நீளத்தில் ரயில் நிலையம், 420 மீட்டர் நீளத்தில் நடைமேடை மற்றும் வாகனங்கள் நிறுத்துமிடம், கழிப்பறை கட்டடம், டிக்கெட் கவுண்டர், பயணிகள் ஓய்வறை என அனைத்து வசதிகள் கொண்ட புதிய ரயில் நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இந்த ரயில் நிலையத்தில்  50 டன் இரும்பைக் கொண்டு மேற்கூரை அமைக்கும் பணிகள் அண்மையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.  அதே போல், 65 மீட்டர் நீளத்தில் ரயில் நிலைய மேற்கூரை, 1 மற்றும் 2-வது நடைமேடைகளை இணைக்கும்  படிக்கட்டு நடைமேடைக்கான மேற்கூரை, 2-வது பிளாட் பாரத்தில் தலா 32 மீட்டர் நீளத்தில் 4 மேற்கூரைகள், முதல் பிளாட் பாரத்தில் தலா 32 மீட்டர் நீளத்தில் 3 மேற்கூரைகள் அமைக்கப்படுகின்றன.இந்த நிலையில், இன்று ரயில்நிலைய கட்டுமானப்பணிக்கான பொருட்களுடன் அதிரையில் அமைக்கப்பட்டுள்ள புதிய அகல ரயில்தடத்தில் சரக்கு ரயில் வந்தது. இந்த ரயில் பாதையில் சுமார் 8 ஆண்டுகளுக்கு பிறகு ரயில் வந்ததை பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் பார்த்தனர்.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy