Adirai pirai
islam posts உலகம் உள்ளூர் செய்திகள்

சவூதி அரசை விமர்சித்த மார்க்க அறிஞர் சபர் அல்-ஹவாலி கைது

இஸ்லாமிய நாடான சவூதியில் அந்நிய கலாச்சாரங்களை புகுத்தி வருகிறது. மேற்கத்திய நாடுகளுடனான உறவை வலுப்படுத்தும் அவரது வழிமுறைகளில் குறைபாடுகள் இருப்பதாகவும் விமர்சனம் எழுந்துள்ளது. இந்நிலையில், அரச குடும்பத்தினரில் ஊழல் குறித்து பிரபல மார்க்க அறிஞ்சர் சபர் அல்-ஹவாலி விமர்சனம் செய்து வந்தார். சவுதி அரச குடும்பத்தின் மோசமான நிலை குறித்து புத்தகம் ஒன்றையும் அவர் வெளியிட்டார். இந்த நிலையில் வன்முறையை தூண்டியதாக சபர் அல்-ஹவாலி, அவரது மகன்கள் 3 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சபர் அல்-ஹவாலி அரசியல் காரணங்களுக்காக கைது செய்யப்படவில்லை என்றும், வன்முறையை தடுக்கவே கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் போலீசார் கூறியுள்ளனர். கடந்த ஒராண்டாக அதிகரித்து வரும் சவூதி அரச குடும்பத்தின் அட்டூழியங்களை பற்றி பேச பயந்து மவுனியாக இருந்து வரும் மூத்த மார்க்க அறிஞர்களுக்கு மத்தியில் , தைரியமாக அதனை பேசிய ஹவலியை அந்நாட்டு அரசு கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy