Adiraipirai.in
உள்ளூர் செய்திகள்

அதிரை உள்ளிட்ட ஊர்களில் ரயில் பாதை அமைக்கும் பணிகளை துரிதப்படுத்த மக்கள் சந்திப்பு பயணம்!

பட்டுக்கோட்டை வட்ட இரயில் பயணிகள் நல சங்கம் சார்பாக பட்டுக்கோட்டை – திருவாரூர் அகல ரயில் பாதை அமைக்கும் பணிகளை துரிதப்படுத்தி, சென்னைக்கு விரைவில் இரயில் வசதி செய்து தர இரயில்வே துறைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டி மக்கள் சந்திப்பு வேன் பயணம் இன்று நடைபெற்றது. இன்று காலை பட்டுக்கோட்டை இரயில் நிலையம் அருகே 8.30 மணிக்கு வேனில் புறப்பட்ட இந்த குழுவினர் 9.30 மணி அதிராம்பட்டினம், 10.30 மணிக்கு தம்பிக்கோட்டை 11.00 மணி முத்துப்பேட்டை சென்று மக்களை சந்தித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர். இதைத்தொடர்ந்து 12.00 மணி தில்லைவிளாகம் இரயில் நிலையம் சென்ற இவர்கள், மதியம் 1.30 மணி திருத்துறைப்பூண்டியிலும், 2.45 மணிக்கும் ஆலத்தம்பாடியிலும், மாலை 04.30 மணிக்கு திருவாரூரிலும் மக்களை சந்தித்துவிட்டு மன்னார்குடி வழியாக பட்டுக்கோட்டைக்கு திரும்புவார்கள்.