Adirai pirai
POLITICS உள்ளூர் செய்திகள்

அதிரையில் தினகரனின் அமமுக உறுப்பினர் சேர்க்கை ஆலோசனை கூட்டம்!

டிடிவி தினகரன், அதிமுக.வின் துணைப் பொதுச்செயலாளராக சசிகலாவால் நியமிக்கப்பட்டார். ஆனால் சசிகலா சிறைக்கு சென்ற பிறகு முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் கை கோர்த்து டிடிவி தினகரனை கட்சியை விட்டு நீக்கினர்.டிடிவி தினகரன், ஆர்.கே.நகரில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். அடுத்து வரும் உள்ளாட்சி மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களை எதிர்கொள்ள தற்காலிகமாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கினார்.இந்த கட்சியின் நகர கிளை அதிரையில் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் அதிரையில் அமமுக வின் அதிரை நகர உறுப்பினர்களை அதிகரிக்க கட்சியின் மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதன்படி இன்று அதிரை வண்டிப்பேட்டையில் கட்சியின் உறுப்பினர் சேர்க்கை தொடர்பான ஆலோசனைக்கூட்டம் தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் மா.சேகர் தலைமையில் நடைபெற்றது. இதில் நகர நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.