Adirai pirai
islam இந்தியா

இந்தியாவிலிருந்து புறப்பட்டது முதல் ஹஜ் குழு

உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் அனைவரது கடமைகளில் ஒன்றாக ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் இருந்து லட்சக்கணக்கான இஸ்லாமியர்கள் ஹஜ் புனித யாத்திரையை மேற்கொள்கின்றனர்.

இந்த நிலையில், இந்த ஆண்டுக்கான ஹஜ் யாத்திரைக்கான முதல் குழு டெல்லியில் இருந்து இன்று புறப்பட்டது. இதனை மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி வழியனுப்பி வைத்தார். டெல்லியில் இருந்து ஹஜ் யாத்திரைக்கு 1200 பேர் இன்று புறப்பட்டுச் சென்றனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முக்தார் அப்பாஸ் நக்வி, இந்த வருடம் ஒரு லட்சத்து 75 ஆயிரம் பேர் ஹஜ் யாத்திரை மேற்கொள்வதாகவும், சுமார் 47 சதவிகித பெண்கள் எவருடைய துணையும் இன்றி யாத்திரை மேற்கொள்ள இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.