Adirai pirai
Alert உள்ளூர் செய்திகள்

அதிரையில் தூங்கும் பேரூராட்சி… துயரத்தில் கடற்கரைத்தெரு வாசிகள்!

அதிரை கடற்கரைத்தெருவில் கடந்த பல மாதங்களாக சாக்கடை பிரச்சனை இருந்து வருகிறது. தெருவின் நுழைவு வாயிலாக கருதப்படும் இப்பகுதியில் தொடரும் இப்பிரச்சனை காரணமாக அவ்வழியாக பெண்கள் மதர்ஷா செல்லும் மாணவிகளும், தொழுகையாளிகளும், பள்ளி குழந்தைகளும் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இதனை அடுத்து யாரையும் எதிர்பார்காமல் அப்பகுதி மக்களிடம் நிதி வசூல் செய்து சுகாதார பணிகளை முஹல்லாவாசிகள் செய்து வருகின்றனர். இது தொடர்பாக நமது அதிரை பிறையில் தொடர்ந்து பல பதிவுகளை வெளியிட்டு வருகிறோம்.

ஆனால் இதற்கு பேரூராட்சி தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அதிரை கடற்கரை தெரு முஹல்லா வாசிகள், 2 முறை அதிரை பேரூராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பிரச்சனையை சரிசெய்வதாக உறுதியளித்த செயல் அலுவலர் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

இறுதியாக பட்டுக்கோட்டை எம்.எல்.ஏ சிவி.சேகரையும் நேரில் சந்தித்த இவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுத்தது போல் தெரியவில்லை. தொடர்ந்து அப்பகுதியின் வீதிகளை சாக்கடை ஆக்கிரமித்து தான் செல்கிறது. இதன் அவலம் கீழுள்ள படங்களின் மூலம் உங்களுக்கு புரியும். மக்களின் வரிப்பணத்தை சம்பளமாக பெரும் பேரூராட்சி ஊழியர்களுக்கு மக்களின் முக்கிய பிரச்சனையான சுகாதார பிரச்சனையை பல கோரிக்கைகள் விடுத்தும் கண்டுக் காணாமல் உள்ளது.