Adirai pirai
POLITICS உள்ளூர் செய்திகள்

மதுக்கூரில் தீ விபத்தால் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறிய MLA C.V.சேகர்

மதுக்கூர் கொல்லைத்தெரு பேரூராட்சி அலுலவலம் அருகில் பல குடிசை வீடுகள் உள்ளது. இன்று மாலை சுமார் 4 மணியளவில் எதிர்பாராத வகையில் ஒரு வீட்டில் ஏற்பட்ட தீ காற்றின் வேகம் காரணமாக மளமளவென அடுத்தடுத்த வீடுகளுக்கும் பரவியது. இந்த விபத்தில் 8 வீடுகள் முற்றிலுமாக எரிந்தது. பட்டுக்கோட்டை, திருமக்கோட்டை, முத்துப்பேட்டை போன்ற ஊர்களிலிருந்து வந்த தீ அணைப்பு வீரர்களின் முயற்சியால் சுமார் 2 மணி நேரத்திற்கு பின்னர் தீ கட்டுப்படுத்தப்பட்டது. இதில் 8 வீடுகள் முற்றிலுமாக தீக்கிரையானது. இது குறித்து தகவல் அறிந்த பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் CV சேகர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர், கோட்டச்சியர் வட்டாட்சியர், தாசில்தார், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோ சம்பவ இடத்திற்கு சென்று அங்கு உள்ள மக்களுக்கு ஆறுதல் கூறினர். பின்னர் பாதிக்கப்பட்டவர்களுக்கு இடம், உடை, உணவு மற்றும் 10,000 ஆயிரம் ரூபாய் நிவாரண தொகையை MLA வழங்கினார்.