Adirai pirai
உள்ளூர் செய்திகள் மரண அறிவிப்பு

சாலை விபத்தில் சிக்கிய அதிரை பிலால் நகர் இளைஞர் ஆசிப் வஃபாத் ஆனார்

அதிரை பிலால் நகரை சேர்ந்த சேக் தாவூத் அவர்களின் மகன் ஆசிப். கடந்த 10 ஆம் தேதி பட்டுக்கோட்டையில் வேலையை முடித்து விட்டு தனது நண்பருடன் பைக்கில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது ஏற்பட்ட விபத்தில் படுகாயமடைந்த இருவரும் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.இந்த நிலையில் ஆசிப் அவர்கள் நள்ளிரவு சிகிச்சை பலனின்றி வஃபாத் ஆனார்.இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜியூன். அன்னாரின் ஜனாசா அஸர் தொழுகைக்கு பிறகு பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். ஆசிப் அவர்களுக்கு சுவர்க்க வாழ்வையும் அவரது குடும்பத்திற்கு அல்லாஹ் பொறுமையையும் கொடுப்பானாக.