Adirai pirai
exclusive உள்ளூர் செய்திகள்

அதிரை ரயில்பணிகள் தொடங்க முதல் முக்கிய காரணமாக இருந்த அஹமது அலி ஜாஃபரை தெரியுமா?

அதிரையில் தற்போது ரயில் நிலையம் அமைக்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. விரைவில் மக்களால் பெரும் எதிர்பார்க்கப்பட்ட ரயில் சேவை தொடங்க உள்ளது. இந்த ரயில் சேவை தொடங்க நாங்கள் தான் காரணம் என காட்டிக்கொள்ள விளம்பரப்பிரியர்கள் பலர் தங்களை முன்னிருத்தி வருவதை அண்மை காலங்களில் காண முடிகிறது. ஆனால், இந்த ரயில் சேவை தொடங்க முதல் முக்கிய காரணமாக இருந்து யாரும் உதவாக நேரத்தில் தனியொருவராக இருந்து உழைத்த ஒருவரை நாம் மறந்துவிட்டோம்.ஆம், அவர் தான் அஹமது அலி ஜாஃபர் அவர்கள்.கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு ரயில் சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்ட பிறகு, அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை பகுதிகளுக்கு ரயில் வசதி வேண்டும்,காரைக்குடி ,திருவாரூர் மீட்டர் கேஜ் பாதையை அகல ரயில் பாதையாக மாற்றவேண்டும் என்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ரயில்வே அமைச்சர் மற்றும் ரயில் இலாக்கா அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்த மாமனிதர்.காங்கிரஸ் ஆட்சியின் போது மத்தியில் அமைச்சர்களாக இருந்த ஜி.கே.வாசன், டி.ஆர்.பாலு, பா.சிதம்பரம் போன்றவர்களை பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் சந்தித்து ரயில்வே சம்மந்தமான கோரிக்கைகளை முன் வைத்தவர். அதிராம்பட்டினம் வெல்ஃபர் அசோசியேசன் என்ற அமைப்பை அதிரை ரயில்வே பணிக்காக மட்டுமே ஆரம்பித்த இவரது தொடர் போராட்டத்தின் காரணமாக அதிரை ரயில் நிலையம் இன்று உருவாகி வருகிறது என்றால் அது மிகையில்லை.இதற்காக உடலாலும்,பொருளாலும் அல்லும் பகலும் பாடுபட்ட நபர் அஹமது அலி ஜாஃபர். 70வயது முதுமையிலும் ரயில்வே வழ்க்குகளை தனியாக வழக்கறிஞரை வைத்து நடத்தி வருகிறார். சொந்த செலவில் வாகனங்களை பிடித்து அவ்வப்போது சென்னையில் உள்ள ரயில்வே மேலாண் இயக்குனர் வசிஸ்டர் ஜொரி முதல்… இன்றைய இயக்குநர் வரை நல்ல நட்பை வளர்த்துகொண்டவர். இவரை தற்போதை அதிரை சமூக ஆர்வலர்கள், ரயில் பணிகளுக்காக தற்போது குரல் கொடுத்து வரும் அமைப்புகள் மறந்து ஒதுக்கிவிட்டதன் உள்நோக்கம் புரியவில்லை.உண்மையில் சொல்லப்போனால் இவர் தான்…. இன்றைய அதிரை ரயில் நிலையத்தின் ஹிரோ.