Adirai pirai
உள்ளூர் செய்திகள்

அதிரை நடுத்தெரு அரசு பள்ளி மாணவர்களுக்கு நோட்டுப்புத்தகம் வழங்கிய ரோட்டரி சங்கத்தினர்!

இன்று அதிரை ரோட்டரி சங்கம் சார்பாக கல்வி கண் திறந்த கர்ம வீரர் காமராசர் பிறந்த தினத்தை முன்னிட்டு நடுத்தெருவில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு விலை இல்லா நோட்டு புத்தகம், எழுதுகலன்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியை அதிரை ரோட்டரி சங்க தலைவர் முகமது சம்சுதீன், செயளாலர் அகமது மன்சூர், பொருளாளர் சாகுல் ஹமீது ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில் சங்கத்தின் முன்னால் தலைவர் ஆறுமுகம், முன்னால் செயளர் முகமது நவாஸ் கான், உறுப்பினர்கள் அய்யாவு, நவாஸ், வெங்கடேஷ், மன்சூர், உதய குமார், சேக் சலாஹுதீன் மற்றும் சமூக ஆர்வலர்கள், A.ஜாகிர் ஹுசைன் (ஹயாத் ரெஸ்ட்டாரண்ட்) U.அஸ்ரப் மற்றும்பள்ளியின் தலைமையாசிரியை S.மாலதி, இடைநிலை ஆசிரியர்,டேவிட் ஆரோக்கியராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர்.